சத்தமே இல்லாமல் இரண்டு முறை... அதிர்ச்சி தந்த வடகொரியா.. பதறிப்போன தென்கொரியா..!! - Seithipunal
Seithipunal


உலக நாடுகளின் கடுமையான எதிர்ப்பு மற்றும் ஐ.நா சபையுடைய தீர்மனம் ஆகியவற்றை மீறி வடகொரியா நாடு அணு ஆயுத சோதனையை தொடர்ந்து மேற்கொண்டு வந்தது. இதன் காரணமாக ஐ.நா சபை மற்றும் அமெரிக்கா பொருளாதார தடையினை விதித்திருந்தது.

அமெரிக்கா நாட்டின் அதிபர் ட்ரம்ப் மற்றும் வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன், கடந்த 2018 ஆம் வருடத்தில் ஜூன் மாதத்தின் போது சிங்கப்பூரில் முதல் முறையாக சந்தித்து பேசிக்கொண்டனர். இதன்பின்னர், கொரிய தீப கற்பத்தை அணு ஆயுதமற்ற பிரதேசமாக மாற்ற உறுதி ஏற்கப்பட்டது. 

இந்த நிலையில், கடந்த வருடத்தின் பிப்ரவரி மாதம் வியட்நாமில் நடந்த சந்திப்பில் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து, கடந்த 17 வருடமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த அணு ஆயுத சோதனை மீண்டும் துவங்கியது. 

கடந்த வருடத்தின் போது 13 முறைகளில் ஏவுகணை சோதனையும், ராக்கெட் எஞ்சின் சோதனையும் நடைபெற்ற நிலையில், தற்போது கரோனா வைரஸின் காரணமாக உலகமே பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. 

இந்நிலையில், வடகொரியா இரண்டு அணு ஆயுதத்தை சோதனை செய்துள்ளது. அங்குள்ள சாஸோன் பகுதியில் நேற்று காலை 6.45 மணி மற்றும் 6.50 மணிக்கு சோதனை நடத்தியுள்ளது. இந்த ஏவுகணை 410 கிமீ தொலைவில் சென்று கிழக்கு கடலோர பகுதியில் விழுந்துள்ளது.

இந்த விசயத்திற்கு தென்கொரியா கடுமையான கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், உலகமே கரோனாவால் பெரும் அச்சுறுத்தலை சந்தித்து வரும் நேரத்தில் இப்படி சோதனை செய்வது வருத்தமளிக்கிறது என்றும் தெரிவித்துள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

North Korea missile launch test south Korea feeling fear


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->