ரஷ்ய படைகளை வழிநடத்த புதிய ராணுவ தளபதி நியமனம்.! - Seithipunal
Seithipunal


உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையேயான போர் 7 மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உக்ரைன் படைகள் ரஷ்ய கட்டுப்பாட்டிலிருந்து கெர்சன், ஜபோரிஜியா உள்ளிட்ட 4 முக்கிய நகரங்களை மீண்டும் கைப்பற்றியுள்ளன.

மேலும் பெரும்பாலான இடங்களில் ரஷ்யப்படைகள் பின்வாங்கியுள்ளதால், உக்ரைனில் ரஷ்யபடைகளை ஒன்று சேர்க்கும் முயற்சியிலும், புதிய வீரர்களை ராணுவத்தில் சேர்க்கும் முயற்சியிலும் ரஷ்யா ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் உக்ரைன் போரில் ரஷ்ய வீரர்களை வழிநடத்த ரஷ்யாவின் புதிய ராணுவ ஜெனரலாக செர்ஜி சுரோவிகின்னை, ராணுவ பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோயிகு நியமித்துள்ளார்.

உக்ரைன் போரில் ஈடுபட்டுள்ள அனைத்து கூட்டுப் படைகளுக்கும் செர்ஜி சுரோவிகின் தலைமை தாங்கி வழி நடத்துவார் என்று ரஷிய பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் இகோர் கொனாஷெகோவ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் ரஷ்யாவின் கிழக்கு மாகாண தளபதியாக இவர் பணியாற்றியுள்ளார் என்றும், சிரியாவுடனான போரில் ரஷ்ய படைகளை வழி நடத்தியுள்ளார் என்றும், இகோர் கொனாஷெகோவ் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

New army chief appointed to lead Russian forces in Ukraine


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->