நேபாளத்தில் புதிதாக கட்டப்பட்ட கௌதம புத்தர் சர்வதேச விமான நிலையம் தொடக்கம்.! - Seithipunal
Seithipunal


நேபாளத்தில் புதிதாக கட்டப்பட்ட கௌதம புத்தர் சர்வதேச விமான நிலையம் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இது நேபாளத்தின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமாகும்.

இந்த விமான நிலையம் புத்தரின் பிறப்பிடமான லும்பினியிலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இது 3 ஆயிரம் மீட்டர் நீளமும் 45 மீட்டர் அகலம் கொண்ட ஓடுபாதையை கொண்டுள்ளது.

நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் திரிபுவன் சர்வதேச விமான நிலையத்திற்கு பிறகு அந்நாட்டின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமாக கௌதம புத்தர் சர்வதேச விமான நிலையம் தொடங்கப்பட்டு உள்ளது.

புத்த பூர்ணிமாவை முன்னிட்டு இன்று காலை தொடங்கப்பட்ட கௌதமபுத்தர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து முதல் விமானமாக ஜஸீரா ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானம் குவைத்துக்கு புறப்பட்டு சென்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nepal second international airport open


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->