ஸ்காட்லாந்து || கடற்கரையில் வினோத உயிரினம்.. ஏலியனா இருக்குமோ? - அச்சத்தில் நபர்.! - Seithipunal
Seithipunal


ஸ்காட்லாந்தில் எடின்பரோவில் உள்ள போர்டோபெல்லோ கடற்கரைக்கு மைக் அர்னாட் என்பவர் சென்றுள்ளார். அங்கு புவியில் உள்ள உயிரினத்தை காட்டிலும் வித்தியாசமாகவும், வினோதமாகவும் ஒரு உயிரினம் இருந்ததை பார்த்தார். 

இந்த உயிரினம் ஒருவேளை வேற்றுக்கிரக உயிரினமாக இருக்கக்கூடும் என்று பயந்து அந்த உயிரினத்தை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அத்துடன் அவர் தெரிவித்ததாவது, 

"நான் இதனை ஒரு வித்தியாசமான முட்களுடன் பார்த்தேன். அது என்னவென்று தெரியாமல், அதன் அருகே சென்று பார்த்தேன். அது ஒருவிதமான பச்சை மற்றும் தங்க நிறங்களுடன் இருந்தது. அதை நான் புரட்டி பார்த்தேன்.

அதில் குட்டிக் குட்டிக் கால்கள் நிறைய இருப்பதைக் கண்டேன். இதுவரை அதுபோன்று எந்த ஒரு உயிரினத்தையும் நான் பார்த்ததில்லை. அதனால், அது ஒரு வேற்று கிரகவாசி உயிரினமாக இருக்கக்கூடும் என்று என் மனதுக்கு தோன்றியது" என்று அவர் தெரிவித்தார்.

அப்போது, ஸ்காட்டிஷ் வனவிலங்கு அறக்கட்டளையைச் சேர்ந்த பீட் ஹாஸ்கெல் என்பவர் அவரது கூற்றை நிராகரித்து, அந்த உயிரினத்தை ஒரு கடல் எலி அல்லது ஒரு வகை புழு என்று அடையாளம் காட்டினார். 

இது தண்ணீருக்கு வெளியே இருப்பதனால், சற்று விசித்திரமாகத் தெரிகிறது, ஆனால் இது ஒரு வகையான கடல் முட்புழு. இது இங்கிலாந்து கடற்கரை முழுவதும் காணப்படுகிறது" என்று தெரிவித்தார்.

இதில் உள்ள பச்சை மற்றும் தங்க நிற முட்கள் காரணமாக இந்த உயிரினம் அசாதாரணமாகவும் மற்ற கடல் உயிரினங்களிலிருந்து வேறுபட்டதாகவும் காணப்படுகிறது. தனக்கு ஆபத்து வரும் போது எச்சரிப்பதற்காக, அதன் முட்கள் பச்சை, நீலம் அல்லது சிவப்பு நிறத்தில் ஒளிரும். அவை 30 செமீ நீளம் வரை வளரக்கூடியவை. இது சிறிய நண்டுகள், ஹெர்மிட் நண்டுகள் மற்றும் பிற புழுக்களை உண்கிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near scotland sea rat in beach


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->