ஆஸ்திரேலியாவில் போலீசார் மீது துப்பாக்கி சூடு - ஆறு பேர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள குயின்ஸ்லாந்து மாகாணத்தில் விம்பிலா நகரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காணாமல் போன ஒருவர் பண்ணை வீட்டில் இருப்பதாக நேற்று போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி, போலீசார் அந்த பண்ணை வீட்டிற்கு சென்றனர்.

அப்போது, அந்த வீட்டிற்குள் இருந்த பெண் உள்பட மூன்று பேர் கொண்ட கும்பல் போலீசார் மீது பயங்கரமாக துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார் உடனடியாக பதில் தாக்குதல் நடத்தியது மட்டுமல்லாமல், கூடுதல் போலீசாரை அனுப்பும்படி தகவல் அளித்தனர். 

இந்த தாக்குதலில், போலீஸ் அதிகாரிகள் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சத்தம் கேட்டு அருகில் இருந்த நபர் அந்த பண்ணை வீட்டிற்கு ஓடி வந்துள்ளார். 

அப்போது, அந்த கும்பல் அந்த நபர் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதனால், அவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து அங்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்ட  நிலையில் மீண்டும் இருவர்களுக்கிடையே துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடைபெற்றது.

சுமார் ஆறு மணி நேரம் நடைபெற்ற இந்த மோதலில் போலீசார் மீது தாக்குதல் நடத்திய மூன்று பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதன்படி, இந்த மோதலில் இரண்டு  போலீசார் மற்றும் 1 பொதுமக்கள் உள்பட மொத்தம் ஆறு பேர் உயிரிழந்தனர். 

இதையடுத்து, போலீசார் மீது தாக்குதல் நடத்திய அந்த கும்பல் யார்? இந்த துப்பாக்கிச் சூடு தாக்குதலுக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near austreliya three peoples gun attack on police officers


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->