அமெரிக்காவில் இந்திய நடிகருக்கு நேர்ந்த கொடூரம்.! - Seithipunal
Seithipunal


பஞ்சாப் மாநிலத்தில் பிரபல நடிகராக இருந்து வருபவர் அமன் தாலிவால். சமீபத்தில் அமெரிக்கா சென்ற இவர் அங்குள்ள கலிபோர்னியா மாகாணத்தில் ஒரு உடற்பயிற்சி கூடத்தில் நடிகர் அமன் உடற்பயிற்சி செய்துள்ளார்.

அப்போது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கையில் கத்தியுடன் அந்த உடற்பயிற்சி கூடத்திற்குள் புகுந்துள்ளார். பின்னர் அங்கிருந்தவர்களை கத்தியைக் காட்டி மிரட்டி உள்ளார். அதன் பின்னர், அந்த நபர் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த நடிகர் அமனை சரமாரியாகக் குத்தியுள்ளார். 

இந்த தாக்குதலில் அமனுக்கு பலத்தக் காயம் ஏற்பட்டுள்ளது.  உடனே அருகிலிருந்தவர்கள் நடிகர் அமனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் உடற்பயிற்சி கூடத்தில் நடிகர் அமன் மீது தாக்குதல் நடத்திய நபர் யார்? எதற்காக அந்த நபர் அமனை மட்டும் குறிவைத்துள்ளார்? என்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும், போலீசார் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதற்கிடையே உடற்பயிற்சி கூடத்தில் நடிகர் அமனை அடையாளம் தெரியாத நபர் தாக்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வேகமாகப் பரவி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near america indian actor kill in gym


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->