ஜப்பான் : கடற்கரையில் கிடந்த மர்ம பந்து.! தீவிர சோதனையில் போலீசார்.! - Seithipunal
Seithipunal


ஜப்பான் நாட்டில் உள்ள டோக்கியோ பகுதியிலிருந்து சுமார் 155 மைல் தொலைவில் தெற்கு கடற்கரை நகரமான ஹமாமட்சு நகரம் உள்ளது. இந்த நகரத்தில் நேற்று முன்தினம் சந்தேகம் படும் வகையில் மிகப்பெரிய வடிவில் மர்ம பந்து ஒன்று கிடந்துள்ளது. 

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மக்கள் அதனுடன் செல்பி எடுத்து கொண்டனர். சிலர் அச்சத்தில் தலை தெறிக்க ஓடினர். இதற்கிடையே அங்குள்ள ஒரு நபர் சம்பவம் தொடர்பாக போலீசாருக்குத் தகவல் அளித்துள்ளார்.

அதன் படி,  ஜப்பானிய போலீஸ் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து சென்று பார்வை இட்டனர். அதன் பின்னர் கடற்கரைக்கு பொதுமக்கள் யாரும் வராதபடி சீல் வைத்து, அந்த மர்ம பந்தை ஆய்வு செய்தனர். 

அந்த 1.5 மீட்டர் விட்டத்தில் உலோக பொருளால் ஆனது தெரிய வந்தது. இதையடுத்து துரும்பிடித்த இந்த மர்ம பந்தை அதிகாரிகள் எக்ஸ்ரே சோதனை செய்ததில் உள்ளே வெற்றிடம் இருப்பதாகவும், வெடிக்கும் அபாயம் இல்லை என்றும் தெரிய வந்தது. 

அதனால், அன்று மாலை நான்கு மணியளவில் கடற்கரைக்கு போடப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன. கடற்கரையில் மிகப்பெரிய அளவில் மர்ம பந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mysterious ball found on beach in jappan


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->