சீனாவில் அடியெடுக்கும் குரங்கு அம்மை : மக்களுக்கு எச்சரிக்கை அறிவுரை வழங்கிய சீன அரசு..! - Seithipunal
Seithipunal


கடந்த 2 ஆண்டுகளாக உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த கொரோனா தொற்று, தற்போது கட்டுப்பாட்டுக்குள் குறைந்து வந்துள்ளது. இதைத் தொடர்ந்து குரங்கம்மை என்ற புதிய வைரஸ் தற்போது உலக நாடுகளில் பரவத்தொடங்கியதால், சில நாடுகளில் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. 

இதற்கிடையே, முதன் முதலில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட நாடான சீனாவிலும் தற்போது குரங்கம்மை வைரஸ் பரவத்தொடங்கியுள்ளது. வெளிநாட்டில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை சீனாவின் சிச்சுவான் மாகாணம் சொங்கியூங் நகருக்கு வந்த நபருக்கு குரங்கம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. 

சீனாவில், முதல் நபருக்கு குரங்கம்மை உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த வைரசை கட்டுப்படுத்த சீன சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில், குரங்கம்மையில் இருந்து தங்களைத் தற்காத்துக்கொள்ள இரண்டு வழிமுறைகளை பின்பற்ற வேண்டுமென சீன நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் தொற்றுநோயியல் பிரிவு தலைவர் வூ ஷங்யூ தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் தெரிவிக்கையில், "நமது அன்றாட உடல்நலம் சார்ந்த வாழ்வில் குரங்கம்மை வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள, 

* வெளிநாட்டினரை தொடாதீர்கள். வெளிநாட்டினருடன் தோலுடன் தோல் தொடர்பு கொள்ளாதீர்கள்.
* கடந்த 3 வாரங்களில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களை தொடாதீர்கள், அவர்களுடன் தோலுடன் தோல் தொடர்பு கொள்ளாதீர்கள்" என்று தெரிவித்தார்.  

இந்நிலையில், குரங்கம்மையில் இருந்து பாதுகாக்க வெளிநாட்டினரை தொடாதீர்கள் என இனவெறி மற்றும் பாகுபாடு காட்டும் வகையில் பேசிய சீன தொற்றுநோயியல் பிரிவு தலைவர் வூ ஷங்யூ-க்கு சமூகவலைதளங்களில், பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

monkey virus attack china people


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->