அமெரிக்கர்களுக்கு தற்காலிக விசா வழங்கப்படும் - அதிபர் ஆண்ட்ரெஸ் மானுவேல் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


அமெரிக்கர்களுக்கு தற்காலிக விசா வழங்கப்படும் - அதிபர் ஆண்ட்ரெஸ் மானுவேல் அறிவிப்பு.!!

அமெரிக்காவில் உள்ள அனைத்து மாகாணங்களும் தங்களது குடியேற்ற கொள்கைகளை கடுமையாக்கி வருகிறது. இதனால் மத்திய அமெரிக்காவில் இருந்து வேலைக்காக மக்கள் அமெரிக்கா செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

ஏனென்றால், மத்திய அமெரிக்காவில் வசிப்பவர்கள் அமெரிக்கா நாட்டிற்கு செல்ல வேண்டும் என்றால் மெக்சிகோ நாட்டை கடக்க வேண்டும். அதனால், அவர்களுக்கு வேலை கிடைப்பதில் மிகவும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரெஸ் மானுவேல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளதாவது, "மெக்சிகோவில் ரெயில் பாதை உள்ளிட்ட பெரிய அளவிலான உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு கூடுதல் மனிதவளம் தேவைப்படுகிறது. அதனால், மெக்சிகோவில் பணிபுரிவதற்காக மத்திய அமெரிக்கர்களுக்கு தற்காலிக விசா வழங்கப்பட உள்ளது. 

இந்த விசாவின் மூலம் அவர்கள் மெக்சிகோவில் சட்டப்பூர்வமாக தங்கலாம்' என்றுத் தெரிவித்தார். அதிபர் மானுவேலின் இந்த திடீர் அறிவிப்பு மத்திய அமெரிக்கர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mexico president announce temporary visa to amaerican peoples


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->