தொடர் ஏவுகணை சோதனை செய்து வடகொரியா அடாவடி.! கடும் கண்டனம் தெரிவித்த ஜப்பான் பிரதமர்.! - Seithipunal
Seithipunal


வடகொரியா உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி தொடர்ந்து ஏவுகணைகளை சோதனை செய்து அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் கம்போடியாவில் நடந்த ஆசியான் மாநாட்டின்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தென் கொரிய அதிபர், ஜப்பான் பிரதமர் ஆகியோர் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்பொழுது வடகொரியாவின் ஏவுகணை சோதனைகளுக்கு தங்களது கடும் கண்டனத்தை தெரிவித்தனர். இந்நிலையில் இதற்கு பதிலடி தருகிற வகையில் இன்று காலையில் வடகொரியா 'பாலிஸ்டிக்' ரக நீண்ட தூரம் செல்லும் ஏவுகணை ஏவி சோதனை செய்தது.

மேலும் வடகொரியா இன்று அதிகாலை மீண்டும் கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய குறுகிய அளவிலான ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. இது அமெரிக்காவின் நிலப்பரப்பைத் தாக்கும் அளவுக்குக் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வடகொரியா ஏவியுள்ளது என்று ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த ஏவுகணை ஹொக்கைடோவுக்கு மேற்கே சுமார் 210 கிமீ (130 மைல்) கடலில் விழுந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா வடகொரியாவிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இது போன்ற செயல்களை எங்களால் சகித்துக் கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Japan PM strongly condemned North Korea missile test


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->