இத்தாலியில் ஒரே நாளில் 919 பேர் பலி.. ஸ்பெயினில் 773 பேர் பலியான கொடூரம்..!! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் பரவியுள்ள கரோனா வைரஸானது சீனாவிலுள்ள யூகான் நகரில் இருந்து பரவியது. தற்போது வரை சுமார் 199 நாடுகளுக்கு பரவி தனது கோர முகத்தை காண்பித்து வருகிறது. இதனால் மக்கள் அனைவரும் பீதியில் ஆழ்ந்துள்ளனர். 

தற்போது வரை கரோனா வைரஸிற்கு 597,267 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 27,365 பேர் பலியாகியுள்ளனர். 133,363 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பூரண நலனுடன் திரும்பியுள்ளனர். உலகம் முழுவதும் தற்போது நாளொன்றுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பலி எண்ணிக்கை அரங்கேறி வருகிறது. 

இந்த நிலையில், இத்தாலி நாட்டில் நேற்று ஒரேநாளில் 919 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலி நாட்டில் 86,498 பேர் கரோனா உறுதியாகி மருத்துவமனையில் அனுமதியாகியுள்ள நிலையில், மொத்தமாக 9,134    பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரேநாளில் பலி எண்ணிக்கை 919 ஆக ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்வலையை பதிவு செய்துள்ளது. 

இதனைப்போன்று ஸ்பெயின் நாட்டில் 65,719 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கை 5,138 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 773 பேர் பலியான நிலையில், பலி எண்ணிக்கை 5,138 ஆக உயர்ந்துள்ளது. உலகளவில் ஸ்பெயின் மற்றும் இத்தாலி நாடுகளின் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் கரோனா வைரஸால் தற்போது வரை 873 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 19 பேர் பலியாகியுள்ளனர். மேலும், நேற்று ஒரேநாளில் 139 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Italy and Spain corona virus peoples died


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->