காபூல் விமான நிலைய குண்டுவெடிப்பு.! மூளையாக செயல்பட்ட ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவர் சுட்டுக்கொலை.! - Seithipunal
Seithipunal


கடந்த 2021ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறுவதாக அறிவித்த பின்னர் பல்லாயிரக்கணக்கான மக்கள் அமெரிக்கப் படைகளுடன் வெளியேற காபூல் விமான நிலையத்தில் குவிந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. மேலும் காபூல் விமான நிலையத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் நிலவுவதால் பயங்கரவாத தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எச்சரித்து வந்தது.

இதைத்தொடர்ந்து ஆகஸ்ட் 26ஆம் தேதி காபுல் விமான நிலையத்தில் அடுத்தடுத்து 4 குண்டுகள் வெடித்தன. இந்த குண்டுவெடிப்பில் 170 ஆப்கானிஸ்தானியர்கள் மற்றும் 13 அமெரிக்க ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். உலக நாடுகளின் மத்தியில் இந்த குண்டுவெடிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இந்த குண்டு வெடிப்பிற்கு ஐ.எஸ். பயங்கரவாத முழு பொறுப்பேற்றது.

இந்நிலையில் காபூல் விமான நிலைய குண்டு வெடிப்பிற்கு மூளையாக செயல்பட்ட ஐ.எஸ். பயங்கரவாத குழுவின் தலைவரை தாலிபான் ராணுவ படையினர் சுட்டுக்கொன்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவலை அமெரிக்க உளவுப்படை பிரிவினர் உறுதி செய்துள்ளனர்.

மேலும் இது தொடர்பாக அமெரிக்கா வெளியிட்ட அறிக்கையில், இந்த தாக்குதலில் அமெரிக்க படைகளின் தலையீடு எதுவும் இல்லை என்றும், பயங்கரவாத அமைப்பின் தலைவரின் பெயர் மற்றும் முழு விவரங்களை தாலிபான் தரப்பிலிருந்து இன்னும் வெளியிடப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Isis mastermind behind Kabul airport attack was shot deaf


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->