அமெரிக்கத் தூதரகம் அருகே அதிகாலையில் வீசப்பட்ட 3 ராக்கெட் குண்டுகள்.!  - Seithipunal
Seithipunal


ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் கடந்த சில வாரங்களாக நடந்து வரும் மோதல் தற்போது உச்ச கட்டத்தை அடைந்துள்ளது. ஈரானின் தளபதி சுலைமானியை அமெரிக்கா கொலை செய்தது. இதற்கு பழிவாங்கும் விதமாக அமெரிக்க வீரர்களைக் குறிவைத்து ஏற்கனவே இருமுறை தாக்குதல் ஈரான் தரப்பில் தாக்குதல் நடத்தப்பட்டது. 

இந்நிலையில் பாக்தாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அருகே 3 ராக்கெட் குண்டுகள் விழுந்ததாக ஏஎஃப்பி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த மூன்று குண்டுகளில் இரு குண்டுகள் அதிகாலை ஒரு மணியளவில் அமெரிக்க தூதரகத்தின் பசுமை மண்டலத்தில் விழுந்ததாகவும், மற்றொரு குண்டு டைகிரிஸ் நதிப்படுகையில் விழுந்ததாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தத் ராக்கெட் தாக்குதலுக்கு ஈரான் ஆதரவு பெற்ற துணை ராணுவப்படையினரே காரணம் என அமெரிக்கா குற்றஞ்சாட்டி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

iran attack america army


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->