#சூடான் || இந்தியர்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க அறிவுறுத்தல்..! - Seithipunal
Seithipunal


வட கிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் ஆர்.எஸ்.எப் எனப்படும் தனிப்பட்ட துணை ராணுவ விரைவுபடையை ராணுவத்துடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, துணை ராணுவ விரைவு படைகள் ராணுவ படைகளுக்கு எதிராக தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சூடான் தலைநகர் கார்ட்டூம், டார்பூர், மெரோ உள்ளிட்ட பல பகுதிகளில் கடுமையான மோதல்களும், குண்டு வெடிப்புகளும் நிகழ்ந்து வருகின்றன.

இதுவரை இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 170க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இந்நிலையில் சூடானின் துணை ராணுவ விரைவு படைகள் ஜனாதிபதி மாளிகை, ராணுவத் தலைவர் ஜெனரல் அல்-புர்ஹானின் இல்லம் மற்றும் கார்ட்டூமின் சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றை கைப்பற்றியுள்ளதால் நாடு முழுவதும் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

இதைத்தொடர்ந்து சூடானில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் இந்தியர்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று சூடானின் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்தியர்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்றும், தேவையில்லாமல் வெளியில் செல்வதை நிறுத்த வேண்டும் என்றும், அவசர உதவிக்கு இந்திய தூதரகத்தை உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indians stay indoors as clash between deputy army and army


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->