மேல் படிப்பிற்காக அமெரிக்கா சென்ற இந்திய மாணவிக்கு நேர்ந்த சோகம்! அதிர்ச்சியில் குடும்பத்தினர்! - Seithipunal
Seithipunal


இந்தியாவை சேர்ந்தவர் சுஸ்ருன்னியா. இவர் அமெரிக்காவிற்கு மேல் படிப்பிற்க்காக சென்று, அங்குள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் முதுகலை தகவல் தொழில் நுட்பம் படித்தார். 

கல்லூரி படிப்பு முடிந்ததும், சுஸ்ருன்னியா இன்டர்ன்ஷிப் பயிற்சி எடுத்து வருகிறார். இவர் சம்பவத்தன்று, ஜான்ஜசிண்டோ நினைவு இடத்தை பார்ப்பதற்காக சென்றிருந்தார்.

அப்போது அவரை திடீரென மின்னல் தாக்கியதால், அவர் அருகில் இருந்த குளத்தில் விழுந்துவிட்டார். 

இதை பார்த்தவர்கள் சுஸ்ருன்னியாவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மின்னல் தாக்கியதில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மூளை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர் . 

பின்னர் அவர் சுயநினைவை இழந்து கோமா நிலைக்கு சென்றுவிட்டார். மருத்துவர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். 

மாணவி கோமாவில் இருக்கும் தகவல் அறிந்த, இந்தியாவில் இருக்கும் அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian student happened tragedy


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->