இந்தியா-சீனா பார்டரில் சத்தமே இல்லாமல் நடக்கும் விஷயங்கள்..!! - Seithipunal
Seithipunal


இந்தியாவிற்கும் - சீனாவிற்கும் இடையே எல்லை தொடர்பான பிரச்சனை நீண்ட வருடமாக நீடித்து வருகிறது. லடாக் பகுதியில் சீன இராணுவம் அத்துமீறி நுழைய முயற்சிப்பதும், இந்திய இராணுவம் தடுத்து நிறுத்துவதும் தொடர்ந்து வருகிறது. 

இந்த தருணத்தில், கடந்த மாதம் 5 ஆம் தேதி மற்றும் 6 ஆம் தேதி பாங்கொங் ஏரி பகுதியில் சீனா வீரர்கள் அத்துமீறி இந்திய எல்லைக்குள் வர முயற்சிக்கவே, இருதரப்பிற்கும் இடையே மோதல் வெடித்தது. இந்த சூழலில், சீனா இராணுவத்தின் விமானப்படைத்தளம் விரிவுபடுத்தும் பணிகள் மற்றும் போர் விமானங்கள் தயார் நிலையில் நிறுத்தப்படுவது தொடர்பான புகைப்படங்கள் செயற்கைகோள் மூலமாக வெளியானது.

இதன்பின்னர் நடந்த இருநாட்டு அதிகாரிகளின் பேச்சுவார்த்தை தோல்வியை தழுவவே, கூடுதலாக சீனா இராணுவம் 5 ஆயிரம் வீரர்களை அப்பகுதியில் இறக்கியுள்ளதாக தகவல் வெளியானது. மேலும், அந்நாட்டு அதிபர் ஷி ஜின் பிங் நாடாளுமன்றத்தில் பேசுகையில், போர் சூழலுக்கு தயாராக இருக்க வேண்டும் என்று கூறினார்.

சமரச பேச்சுக்கள் ஒருபுறம் இருந்தாலும், போர் சூழலை எதிர்கொள்ளவும் இந்திய இராணுவம் தயாராகி வருகிறது. பதற்றம் தொடர்ந்து நீடிப்பதால் கூடுதல் படைகளை சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்துள்ளது. இந்தோ திபெத்திய காவல் படைகளும் சம்பவ இடத்தில் குவிந்து வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India China border army officials under control


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->