சீனாவைத் தொடர்ந்து இந்திய சேனல்களை முடக்கிய நாடு.!! - Seithipunal
Seithipunal


நேபாள அரசு பாராளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய மூன்று இந்திய பகுதிகளை தங்கள் நாட்டுடன் இணைத்து புதிய வரைபடத்தை வெளியிட்டது. 

இதைத்தொடர்ந்து இந்திய அரசுக்கும் நேபாள அரசியல் கருத்து மோதல் ஏற்பட்டு வருகிறது. இது மட்டுமின்றி நேபாள அரசின் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. 

இந்நிலையில் தற்போது நேபாள அரசு நாட்டில் தூர்தர்ஷன் தவிர்த்து அனைத்து இந்திய சேனல்களை முடக்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உள்ளது இது குறித்து அந்நாட்டு செய்தி மற்றும் தொடர்பு துறை அமைச்சர் யுபராஜ்  காதி வாடா கூறியவை, இந்திய ஊடகங்கள் நேபாள அரசின் இறையாண்மையும், கண்ணியத்தையும் காக்கின்றது.நேபாள அரசு அரசியல் மற்றும் சட்ட தீர்வுகள் நாடும் எனக் கூறினார். 

மேலும், இதுகுறித்த அதிகாரப்பூர்வமாக நேபாள அரசு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என கூறப்படுகிறது. சமீபத்தில் லடாக் எல்லைப்பகுதியில் இந்தியா-சீனா இடையே நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அதையடுத்து 59 சீன செயல்களை இந்திய அரசு தடை செய்தது. இதனைத்தொடர்ந்து சீனாவில் இந்திய சேனல்களை தடை செய்தது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

india channels ban nepal


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->