உக்ரைன் விமான விபத்து தொடரான விஷயத்தில்... ஈரான் அதிபர் பகீர் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


உக்ரைன் நாட்டுக்கு சொந்தமான பயணிகள் விமானம் ஈரான் தலைநகர் டெஹ்ரான் அருகே விழுந்து நொறுங்கியது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக பயணிகள் விமானம் விபத்தில் சிக்கியதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியானது. டெஹ்ரான் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் விமானம் விழுந்து நொறுங்கியது. போயிங் 737 ரக விமானம் விபத்தில் சிக்கிய நிலையில் அதிலிருந்த 176 பேர் சம்பவ இடத்திலே பலியானார்கள்.

176 பலியான உக்ரைன் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் ஒப்புக்கொண்டுள்ளது. மனித தவறினால் தான் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது என ஈரான் விளக்கம் அளித்துள்ளது. அமெரிக்க படைகளுக்கு எதிராக மேற்கொள்ளவிருந்த தாக்குதலில் அப்பாவி மக்கள் பரிதாபமாக பலியானது உலகளவில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. 

ஈரான் நாட்டின் அண்டை நாடாக இருக்கும் ஈராக்கில் அமெரிக்க படைகள் தளம் உள்ளது. இங்குள்ள பிஸ்மாயக், அல்-ஆசா மற்றும் எர்பில் விமானப்படை தலத்தில் அமெரிக்க இராணுவத்துடைய தளங்கள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில்., அல்-ஆசாத் மற்றும் எர்பில் விமானப்படை தளத்தில் கடந்த 8 ஆம் தேதியன்று தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில்., சுலைமானி கொலைக்கு பதிலடியாக இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. 

அல்-ஆசாத் விமானப்படை தளத்தினை சுமார் 17 ஏவுகணைகள் மற்றும் எர்பில் விமானப்படை தளத்தினை 5 ஏவுகணையும் தாக்கியதாக கூறிய நிலையில்., இந்த தாக்குதலின் போது 80 அமெரிக்க வீரர்கள் பலியாகியுள்ளனர். மேலும்., இந்த தாக்குதலில் அமெரிக்க படையினை தாக்கியதாகவும்., தங்களின் இராணுவ அதிகாரிகளுக்கு உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றும் அமெரிக்கா தெரிவித்தது. ஈரானின் ஏவுகணை தாக்குதலை உலக நாடுகள் கண்டித்து இருந்தது.

இதனால் இரு நாட்டிற்கும் இடையே போர் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்., இரு தரப்பையும் அமைதிக்காக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில்., ஈராக் நாட்டின் தலைநகர் பாக்தாத் நகருக்கு வடக்கே அமைந்துள்ள பலாட் அமெரிக்க படைத்தளத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

சுமார் 8 ஏவுகணைகள் மூலமாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில்., இந்த தாக்குதலில் ஈராக் நாட்டினை சார்ந்த 4 இராணுவ வீரர்கள் மட்டும் காயம் அடைந்துள்ளதாகவும்., தாக்குதலுக்கு முன்னதாக அமெரிக்க படையினர் முகாமிட்டு இருந்த நிலையில்., பின்னர் பணியை கவனிக்க சென்ற நேரத்தில் ஏவுகணை விழுந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்., பயணிகள் விமானம் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து உலக நாடுகளில் இருந்து கண்டனம் எழுந்தது. உள்ளூரிலும் கடுமையான போராட்டம் நடைபெற்றதால் சர்வதேச விசாரணை குறித்த கருத்துக்கள் எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக தற்போது விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை கைது செய்துள்ளதாக ஈரான் நாட்டின் செய்தி தொடர்பாளர் குளம் உசேன் இஸ்மாயிலி தெரிவித்துள்ளார். 

இந்த நேரத்தில் மத்திய ஈரான் அதிபர் ஹசன்ரூஹானி தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய நேரத்தில், இந்த விவகாரத்தில் உயர் நீதிபதிகள் மற்றும் வல்லுநர்கள் கொண்ட சிறப்பு நீதிமன்றத்தினை நீதித்துறை அமைக்க வேண்டும் என்றும், ஒட்டுமொத்த உலகமும் இந்த விஷயத்தை கவனித்துள்ளதால் உக்ரைன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு காரணமாக இருந்த அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Ukraine flight accident Iran president announce investigation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->