மீண்டும் படையெடுத்த வெட்டுக்கிளிகள்.. கண்ணீரில் கரைபுரளும் விவசாயிகள்.!! - Seithipunal
Seithipunal


சூர்யா நடிப்பில் வெளியான காப்பான் திரைப்படத்தில் தமிழகத்தில் இருக்கும் டெல்டா மாவட்டங்களில் விவசாயத்தை அளிப்பதற்காக பெரிய நிறுவனம் வெட்டிக்கிளிகளை அனுப்பி வைக்கும். இது தொடர்பான விபரங்கள் மற்றும் பல விஷயங்களை இந்த படத்தில் காட்டியிருப்பார்கள்.

இந்தியாவில் உள்ள குஜராத் மாநிலத்தில் தற்போது வெட்டுக்கிளிகள் படையெடுத்து விவசாய நிலத்தை அழித்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் தற்போது வரை இல்லாத நிலையில், வெட்டுக்கிளிகள் பெரும் பாதிப்பை ஏற்பட்டுள்ளது. 

சோமாலியா நாட்டில் சுமார் இலட்சக்கணக்கில் வெட்டுக்கிளிகள் படையெடுத்து விவசாய பயிர்களை தாக்கி பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. சோமாலியா கியூ நதியின் படுகையில் அமைந்துள்ள விவசாய நிலங்களை குறிவைத்து வெட்டுக்கிளிகள் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.  

இதனையடுத்து அந்த நாட்டு அரசாங்கத்தின் மூலமாக தேசிய அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலமாக போர்க்கால அடிப்படையில் வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். இந்த நாட்டில் ஏப்ரல் மாதம் அறுவடை காலம் என்பதால், அதற்குள் அனைத்தும் சரியாகுமா? என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர். 

Tamil online news Today News in Tamil

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Somalia vettukili insect problem


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->