அரசின் எச்சரிக்கையை மீறி கடலுக்குள் சென்ற மீனவர்கள்... பரிதவித்து துடிதுடித்த பெரும் சோகம்.!! - Seithipunal
Seithipunal


ரஷ்ய நாட்டில் உள்ள காம்சட்கா தீபகற்ப பகுதியில் உள்ள மேற்கு ஒகோட்ஸ்க் கடல் பகுதியானது தற்போது உறைந்து பனிக்கட்டியாக இருந்து வருகிறது. மேலும், இவை பார்ப்பதற்கு பலமான பனிக்கட்டிகள் போன்று இருக்கும். 

ஆனால் எளிதில் உடைந்துகொள்ளும் தன்மையை கொண்டுள்ளதால், இப்பகுதிக்கு மக்கள் யாவரும் பாதுகாப்பு கருதி செல்ல வேண்டாம் என்று ரஷிய அரசின் சார்பாக எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது. 

அப்பகுதியில் வசித்து வரும் மீனவர்கள் அரசின் எச்சரிக்கையை கண்டுகொள்ளாது, மீன்பிடிக்க வேண்டி ஒகோட்ஸ்க் கடலுக்குள் சென்றுள்ளனர். இந்த நிலையில், தற்போது 600 மீனவர்கள் உறைந்துபோயுள்ள கடலின் நடுப்பகுதியில் சென்று மீன்பிடித்துக்கொண்டு இருந்துள்ளனர். 

இந்த நேரத்தில், பனியின் மேற்பரப்பு உடைந்து மீனவர்கள் அனைவரும் நடுக்கடலில் சிக்கியுள்ளனர். இவர்கள் இருந்த பகுதியை இராட்சத பனி என்று நினைத்துக்கொண்டு இருக்கவே, கடலின் நடுப்பகுதியில் சிக்கியுள்ளனர். 

இதனையடுத்து இது தொடர்பாக தகவல் அறிந்த மீட்பு படையினர் சுமார் 7 மணிநேர போராட்டத்திற்கு பின்னர் 536 மீனவர்களை மீட்ட நிலையில், 60 பேர் எந்தவிதமான உதவியும் இன்றி அருகில் இருக்கும் கடற்கரை பகுதிக்கு வந்து சேர்ந்துள்ளனர். இது தொடர்பான தகவல் மீட்பு படையினரால் வெளியிடப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Russia Fishermen rescued form ice berg sea


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->