இந்தோனேசிய தீவு பகுதியை மீண்டும் உலுக்கிய நிலநடுக்கம்.! அதிர்ச்சியான மக்கள்., வெளியான எச்சரிக்கை அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


எரிமலைகள் நிரம்பிய பகுதி மற்றும் பசுபிக் நெருப்பு வளைய பகுதியில் அமையப்பெற்ற நாடு இந்தோனேசியா. இந்த பகுதியில் அடிக்கடி அதிக அளவிலான நிலநடுக்கம் ஏற்படுவதும்., எரிமலை திடீரென வெடித்து சிதறுவதும்., சுனாமி போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படுவதும் வழக்கம். 

இந்த இயற்கை சீற்றங்கள் தொடர்ந்து நடைபெறும் நிலையில்., இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை இந்தோனேசியாவில் இருக்கும் பாளி தீவு பகுதியில் நிலநடுக்கமானது ஏற்பட்டது.

bali earthquake, Indonesia earthquake,

அங்குள்ள முகாரி என்ற நகரில் இருந்து சுமார் 29 மைல் தொலைவில் உள்ள கடல் பகுதியில்., 63 மைல்கள் ஆழத்தில் மையம் கொண்ட இந்த நிலநடுக்கமானது., ரிக்டர் அளவு கோளில் சுமார் 5.7 ஆக பதிவாகியது. 

இந்த நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் பதறியபடி திறந்த வெளிகளில் தஞ்சம் அடைந்த நிலையில்., அங்குள்ள கட்டிடங்கள் அனைத்தும் பயங்கரமாக குலுங்கியது. இதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.

bali earthquake, Indonesia earthquake,`

இதுமட்டுமல்லாது இந்த நிலநடுக்கத்தின் தாக்கமானது அங்குள்ள லம்பாக் மற்றும் கிழக்கு ஜாவா பகுதிகளிலும் உணரப்பட்டது. இதனால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்ற தகவல் மட்டும் வெளிவந்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Indonesia bali island have a earthquake peoples panic


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->