உணவின் சுவையை கண்டறிந்தால் ரூ.9 ஆயிரம் ஒரு நாளைக்கு சம்பளம்..!! ஹோட்டல் நிர்வாகம் அதிரடி.!! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்து நாட்டில் உள்ள கிரஸ்மியர் நகரில் டாபோடில் உணவமானது செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்திற்கு சொந்தமாக உணவகம் மற்றும் ஆழகு நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு சுவையான மற்றும் ஆரோக்கியமான., தரமான உணவுகளை வழங்குவதில் தற்போது புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. 

இந்த நிறுவனத்தின் முயற்சிப்படி உணவகத்தில் இருந்து தயாரிக்கப்படும் தேநீர் மற்றும் நொறுக்கு தீனிகளை சுவைத்து அதன் தரம் மற்றும் சுவை குறித்து சொல்வதற்கும்., மாற்றங்கள் இருந்தால் கூறுவதற்கும் ஊழியர்களை தேடி வருகிறது. இவ்வாறாக பணியாற்ற வரும் ஊழியர்களுக்கு தினமும் 129 அமெரிக்க டாலர்கள் சம்பளம் வழங்கவும் திட்டமிட்டுள்ளது. 

இந்த விஷயம் தொடர்பாக அந்நிறுவனத்தின் அதிகாரி தெரிவித்த சமயத்தில்., "பிற்பகல் வேலையில் சுவையான தேநீரை அருந்துவதற்கு நாங்கள் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறோம். பிரிட்டன் நாட்டில் உள்ள தலைசிறந்த உணவகத்தில் எண்களின் நிறுவனம் உள்ளது என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த., உணவுகளின் சுவை என்பது முக்கியமான ஒன்றாகும். 

food,

இந்த சுவையை நிர்ணயம் செய்வதற்கு பணியாட்கள் தேவை என்பதால்., இது குறித்த வேலைவாய்ப்பினை தெரிவித்தோம். எங்களின் நிறுவனத்தில் பணியாற்ற பலரும் விண்ணப்பித்துள்ள நிலையில்., நாங்கள் தேர்வு செய்யும் பணியாளர்கள் எங்கள் நிறுவனத்தில் தயாராகும் அனைத்து உணவுகளையும் சுவை சோதனை செய்வார்கள். 

இந்த பணிக்கு தேர்தெடுக்கப்படவுள்ளவர்களின் பட்டியில் வருகின்ற 25 ஆம் தேதியன்று வெளியாகும். இவர்களுக்கு நாளொன்றுக்கு 129 அமெரிக்கா டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.9 ஆயிரம்) வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும்., அவர்களுக்கு இருப்பிட வசதியும் கொடுக்கப்படுகிறது என்று தெரிவித்தார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

In England food taste checking recruitment going on per day salary 9k


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->