அமெரிக்காவிடம் சரண்டர் ஆன சீனா.. கரோனாவை தொடர்ந்து வெளியான அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


சீன நாட்டில் உள்ள ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான உகானில், கடந்த டிசம்பர் மாதம் இறுதி முதலாக பரவிய கரோனா வைரஸ் உலகம் நாடுகளை அச்சுறுத்தியுள்ளது. இந்த வைரஸ் தாக்கமானது அசுர வேகத்தில் பரவிக்கொண்டு வருகிறது. 

தற்போதுவரை சுமார் 25 க்கும் மேற்பட்ட நாடுகள் கரோனா வைரஸின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நாளுக்கு நாள் ஏற்படும் தொடர் உயிரிழப்புகளும் பெரும் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது. இந்திய கரோனா பரவ வாய்ப்புள்ள நாடுகளின் பட்டியலில் 17 ஆவது இடத்தில் உள்ளது.

சீன நாட்டினை மையமாக கொண்டு பரவிவந்த நிலையில், உகான் நகரில் உள்ள மருத்துவமனைகளில் நோயாளிகள் தினமும் குவிந்த வண்ணம் உள்ளனர். மேலும், நேற்றைய தினத்தின் நிலவரப்படி சுமார் 1,921 பேர் வைரஸ் பாதிப்பின் காரணமாக பலியாகியுள்ளதாக சீன அரசு தெரிவித்திருந்தந்து. 

caronavirus,

இந்த நிலையில், ஒரே நாளில் பலர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பலி எண்ணிக்கையும் சுமார் 2,004 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரேநாளில் ஏற்பட்ட அடுத்தடுத்து உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கையும் 2,004 ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது வரை சுமார் 74,185 பேர் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

மேலும், சீனாவிற்கும் - அமெரிக்காவிற்கு இடையே நடந்த பொருளாதார பிரச்சனையின் காரணமாக, அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களில் அதிகளவு வரிவசூல் செய்யப்பட்டது. அமெரிக்காவுடைய மருத்துவ பொருட்களின் மீதும் அதிக வரிவசூல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு தற்போது விலக்கு அளித்து சீன அரசு அறிவித்துள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in china reduce tax form america export materials in china


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->