இனி ஓடுவதையும், ஊர்வனவையும் சாப்பிட்டால் அவ்வுளவுதான்... சீனாவில் அமலாகும் சட்டம்..!! - Seithipunal
Seithipunal


சீன நாட்டில் பாம்பு, பூனை மற்றும் வவ்வால் இறைச்சி போன்றவை படுஜோராக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவை அங்குள்ள மக்களுக்கு பிடித்தமான உணவாகும். இந்த நாட்டின் ஹூபேய் மாகாணத்தில் உள்ள யூகான் நகரில் கரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இங்குள்ள இறைச்சி சந்தையில் இருந்த இறால் விற்பனை செய்த பெண்மணியே கரோனாவின் முதல் நோயாளி என்பது தெரியவந்துள்ளது.

இந்த வைரஸின் தாக்கம் கடந்த மூன்று மாதமாக சீன நாட்டினை புரட்டியெடுத்த நிலையில், தனது வீரியத்தை உலகின் அனைத்து நாடுகளிலும் காண்பிக்க துவங்கி, கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதன் காரணமாக உலகின் பெரும்பாலான நாடுகள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து, போக்குவரத்தை முடங்கியுள்ளது. மக்களின் அத்தியாவசிய தேவைக்கு வெளியே அனுமதித்து தேவையான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

கரோனாவின் தாக்கம் சீனாவில் கட்டுக்குள் வந்ததாக அறிவிப்புகள் வெளியான நிலையில், ஹூபேய் மாகாணம் இயல்பு நிலைக்கு திரும்பியது. இங்குள்ள யூகான் நகரில் போக்குவரத்து துவங்கியுள்ள நிலையில், இறைச்சி கடைகளும் திறக்கப்பட்டுள்ளது. அங்குள்ள குயிலின், டாங்குவான் போன்ற பகுதியில் நாய் மற்றும் பூனைகள் கூண்டுகளில் அடைக்கப்பட்டு சலுகை விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், வவ்வால், தேள், வாத்து, முயல் போன்றவையும் விற்பனை செய்யப்படுகிறது. இதனை வாங்க மக்கள் கூட்டம் குவிந்து வருகிறது.

இந்த நிலையில், சீன நாட்டில் உள்ள குவாங்டாங் மாகாணத்தில் புதிய விதி அமல்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி வனவிலங்குகளை சாப்பிட தடை விதிக்கப்படுகிறது. மீறி வனவிலங்குகளை சாப்பிடும் நபர்களுக்கு, அந்த விலங்கின் சந்தை மதிப்பை விட 20 மடங்கு அபராதம் விதிக்கப்படும் என்றும், இந்த விதி வரும் மே மாதத்தின் 1 ஆம் தேதி முதல் அமலாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in china Guangdong state order animal eating fine


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->