கரோனாவை கண்டறிந்த மருத்துவரின் வாழ்க்கையை முடித்துவைத்த கரோனா.. அதிர்ச்சி தகவல்.!! - Seithipunal
Seithipunal


சீனாவில் கொரோனா வைரஸ்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 630 ஆக அதிகரித்துள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. சுமார் 30 ஆயிரத்திற்கும் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சீனாவில் வூஹான் மாகாணத்தில் உள்ள மத்திய மருத்துவமனையில் லீ வென்லியாங் என்ற மருத்துவர் பணியாற்றிவருகிறார். வென்லியாங் இடம் சிகிச்சைக்காக வந்த நோயாளிகள் தீவிர காய்ச்சல் காரணமாக அவதிப்பட்டு வந்தனர். இவர்கள் அனைவரும் கடல் உணவு பொருட்களை விற்பனை செய்யும் சந்தையில் பணியாற்றிவருகிறார்.

இவர்களில் 8 பேருக்கு ஒரே மாதிரியான வைரஸ் தாக்கம் இருப்பதை கண்டுபிடித்துள்ளார். உடனே இதை சக மருத்துவர்களுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 30 ஆம் தேதியை தெரிவித்துள்ளார். இந்த தகவல் இணையத்தில் வேகமாக பரவியதால் சீன பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் மருத்துவர் லீ வென்லியாங் கண்டுபிடித்தனர்.

இந்த ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதி கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான பெண்ணுக்கு சிகிச்சை அளித்துள்ளார். அதில் அவரையும் வைரஸ் தாக்கியுள்ளது. அவர் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், இன்று அதிகாலையில் சிகிச்சை பலனின்றி கரோனாவை கண்டறிந்த மருத்துவர் பரிதாபமாக பலியாகியுள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in china caronavirus discovered doctor died


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->