வங்கதேசத்தில் இந்து மதக் கோயில் மீது தாக்குதல்.. சிலைகள் உடைப்பு.! - Seithipunal
Seithipunal


வங்காள தேசத்தில் உள்ள இந்து மத கோவிலில் சிலைகள் உடைக்கப்பட்டு கோவிலின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

வங்காளதேசம் மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் சிறுபான்மை மதத்தினர் மற்றும் அவர்களது மத வழிபாட்டு தளங்களில் தாக்குதல் நடக்கும் சம்பவம் அதிகரித்து வருகின்றது. அந்த வகையில் வங்காள தேசத்தில் உள்ள பிரம்மன்பரியா மாவட்டத்தில் நைமத்பூர் எனும் கிராமம் அமைந்துள்ளது. 

இந்த கிராமத்தில் துங்கை கோவில் என்ற இந்து மத வழிபாட்டு தளம் அமைந்துள்ளது. கடந்த வியாழக்கிழமை இந்த கோவிலுக்கு வந்த ஒரு நபர் கோவிலின் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். அத்துடன் அங்கிருந்த கடவுள் சிலைகளை அடித்து நொறுக்கியுள்ளார். 

அதன்பின் அங்கிருந்து அவர் தப்பியோடியுள்ள நிலையில், இது குறித்த பகுதி மக்கள் போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் தப்பியோடிய நபரை கைது செய்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டது கலில் மியா என்ற நபர் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் எதற்காக இப்படி தாக்குதல் நடத்தினார் என்பது குறித்து போலீசார் அடுத்த கட்ட விசாரணை நடத்தி வருகின்றனர்.ஈஈ


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Hindu temple attack in bangaladesh


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->