முதன்முதலாக ஜப்பானுக்கு நோபல் பரிசைப் பெற்று தந்தவர்.. பிறந்த தினம்.!! - Seithipunal
Seithipunal


ஹிடேகி யுகாவா:

முதன்முதலாக ஜப்பானுக்கு நோபல் பரிசைப் பெற்றுத் தந்தவரான ஹிடேகி யுகாவா 1907ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் தேதி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பிறந்தார்.

இவர் ஆதாரத் துகள்களுக்கு இடையே ஏற்படும் உள்வினைகள் பற்றி ஆராய்ந்து அறிக்கை வெளியிட்டு, அதில் அணுக்கரு விசைக்கான புதிய புலக் கொள்கையை விளக்கிஇ 'மீஸான்' (Meson) என்ற பொருள் வெளிப்படுவதை குறிப்பிட்டார்.

மேலும் இவர் அணுக்கரு ஆற்றல்களின் மீஸான் கோட்பாட்டை உருவாக்கினார். அணுக்கருவில் ஏற்படும் வலிமைமிக்க அணுக்கரு விசையை உருவாக்கும் எலக்ட்ரானைவிட பன்மடங்கு கனமான ஆதாரத் துகளைக் கண்டறிந்தார். இதற்காக இவருக்கு 1949ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு கிடைத்தது.

தலைசிறந்த கோட்பாட்டு இயற்பியல் அறிஞரான ஹிடேகி யுகாவா 1981ஆம் ஆண்டு மறைந்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

hideki yukawa birthday 2020


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->