அரசு ஊழியர்கள், அதிகாரிகள் ஆப்பிள் நிறுவன சாதனங்களை பயன்படுத்த தடை - ரஷியா அதிரடி - Seithipunal
Seithipunal


அமெரிக்க உளவு நிறுவனங்கள் ஆப்பிள் நிறுவனத்தின் போன் மற்றும் இதர சாதனங்களைக் கொண்டு உளவு நடவடிக்கையில் ஈடுபடுவதாக ரஷ்யா ஃபெடரல் பாதுகாப்பு நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது.

உலகம் முழுவதும் மொபைல் போன், கணினி, ஸ்மார் வாட்ச் போன்ற புதிய வகை தொழில்நுட்பங்களில் ஐஓஎஸ் எனப்படும் ஆப்பிள் நிறுவனத்தின் மென்பொருளும், மைக்ரோசாஃப்ட் மற்றும் ஆன்ராய்டு நிறுவனத்தின் மென்பொருள்கள் பயன்பாட்டில் உள்ளது. ஆன்ராய்டு மற்றும் மைக்ரோசாஃப்ட் மென்பொருளை விட அட்வான்ஸ் தொழில்நுட்படங்கள் இருப்பதால், அதிகமான பயனாளர்கள் ஆப்பிள் மென்பொருளுக்கு மாறி விடுகின்றனர். மேலும் ஆப்பிள் பயனாளர்களின் சாதனங்களை எளிதில் ஹேக் செய்ய முடியாது.

இந்த நிலையில், அனைத்து அரசு அதிகாரிகளும் ஆப்பிள் நிறுவன சாதனங்களை பயன்படுத்த தடை விதித்து ரஷியா உத்தரவிட்டுள்ளது. ஏற்கெனவே சில அரசு அதிகாரிகள் ஆப்பிள் சாதனங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது அனைத்து அரசு அதிகாரிகளுமே  ஆப்பிள் நிறுவன சாதனங்களை பயன்படுத்தக்கூடாது என்று ரஷ்யா உத்தரவிட்டுள்ளது.

ஐபோன்கள் மட்டுமின்றி ஆப்பிள் நிறுவனத்தின் எந்த சாதனத்தையும் பயன்படுத்த வேண்டாம் என ரஷ்ய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், ஐபோன்களுக்கு மாற்றாக வேறு பாதுகாப்பான போன்களை பயன்படுத்துமாறு அந்நாட்டில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அமெரிக்க உளவு நிறுவனங்கள் ஆப்பிள் நிறுவனத்தின் போன் மற்றும் இதர சாதனங்களைக் கொண்டு உளவு நடவடிக்கையில் ஈடுபடுவதாக ரஷ்யா ஃபெடரல் பாதுகாப்பு நிறுவனம் குற்றச்சாட்டியுள்ளது. ஆப்பிள் நிறுவனம் இந்த குற்றச்சாட்டை மறுத்துவிட்டது. மேலும் பயனர்களின் தனி உரிமை பாதுகாப்பதில் தங்கள் நிறுவனம் கவனமாக செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது..


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Government employees officials banned from using Apple devices Russia Action


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->