ரிப்பன் வெட்டி, திறக்கும் போதே சளாரென இடிந்த பாலம்.. தீயாக பரவும் வீடியோ.!  - Seithipunal
Seithipunal


ஆப்பிரிக்காவில் இருந்து காங்கோ குடியரசு நாடாக பிரிந்தது. இந்த காங்கோ நாட்டின் பாலம் ஒன்று திறப்பு விழாவின் போது இடிந்து விழுந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. 

இது குறித்து காங்கோ நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவலின் படி, உள்ளூர் ஆற்றை மக்கள் கடக்க மிகவும் சிரமப்பட்ட நிலையில் மழைக்கால தேவைக்காக ஒரு சிறிய பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்திற்கு முன்பு தற்காலிக கட்டமைப்பு அடிக்கடி உடைந்து வருவதாக புகார் கொடுக்கப்பட்டிருந்தது. 

ஆனால் இதை அரசாங்கம் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. இத்தகைய சூழலில், பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அதிகாரிகள் திறந்து வைக்க வந்தனர். அப்பொழுது ரிப்பன் வெட்டும்போது அந்த பாலம் இடிந்து விழுந்துள்ளது. 

அதிர்ஷ்டவசமாக அப்பொழுது உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால், இதில் கலந்து கொண்ட பொதுமக்கள் பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இந்த பாலத்தை உருவாக்க ஒரு மில்லியன் டாலர்களுக்கு மேல் செலவாகியதாக தெரிவிக்கப்படுகிறது. பாலம் விழுந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

gango bridge damaged while opening


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->