நாடு கடத்தப்பட்ட சீரியல் கில்லர் சார்லஸ் சோப்ராஜ் பாரிஸ் வந்தடைந்தார்.! - Seithipunal
Seithipunal


1970களில் ஆசியா முழுவதும் நடந்த பல கொலைகளுக்குப் பொறுப்பான தொடர் கொலையாளி சார்லஸ் சோப்ராஜ் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர். இவர் 1975ல் வட அமெரிக்க சுற்றுலாப் பயணி கோனி ஜோ ப்ரோன்சிச்சைக் கொலை செய்த குற்றத்திற்காக 2003ல் நேபாளம் தலைநகர் காத்மண்டுவில் கைது செய்யப்பட்டார்.

பின்பு இவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. மேலும் கனடாவில் செய்யப்பட்ட மற்றொரு கொலையும் நிரூபிக்கப்பட்டு அதற்கான சிறை தண்டனை பெற்று வந்தார். இந்நிலையில் நல்ல நடத்தையின் அடிப்படையில் தன்னை விடுதலை செய்யக்கோரி சார்லஸ் சோப்ராஜ் நேபாள அரசிடம் மனு அளித்திருந்தார். 

இதை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஸப்னா பிரதான் மல்லா மற்றும் திலக் பிரசாத் சிரேஷ்டா ஆகியோா் சீரியல் கில்லர் சார்லஸ் சோப்ராஜை விடுவிக்குமாறு உத்தரவிட்டனர். மேலும் 15 நாட்களுக்குள் அவருடைய நாட்டிற்கு திருப்பி அனுப்புமாறு நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் காத்மாண்டு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட சோப்ராஜ், கத்தார் வழியாக நேற்று பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் சென்றடைந்தான். மேலும் பிரான்சில் உள்ள அவரது வக்கீல் இசபெல் கவுட்டன்ட் பெய்ர், சுதந்திரம் பெற்றதில் சோப்ராஜ் மகிழ்ச்சியாக உள்ளார் என்றும், இனி அவர் ஓய்வெடுப்பார் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Exiled serial killer Charles Sobraj arrives in Paris


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->