பரபரப்பை ஏற்படுத்திய எலான் மாஸ்க் ட்வீட் - அரசியலில் மாற்றம் ஏற்படுமா? - Seithipunal
Seithipunal


ஐக்கிய நாடான அமெரிக்காவில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், தற்போது ஜனாதிபதி ஜோ பைடனின் பதவிக்காலம் முடிவடைய உள்ளதால் வருகிற நவம்பர் மாதம் அங்கு பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. 

இந்தப் பொதுத்தேர்தலில், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இதற்கிடையே, வெள்ளை மாளிகையில் நடைபெற்ற மின்சார வாகன உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள டெஸ்லா நிறுவனத்திற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

இதனால், அதிருப்தி அடைந்த டெஸ்லா நிறுவனரும், உலக கோடீஸ்வரருமான எலான் மஸ்க் ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடனுக்கு வாக்களிப்பதை தன்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இந்த நிலையில் அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், `பொது அறிவு கொண்ட ஒரு சாதாரண நபர் அமெரிக்க ஜனாதிபதி ஆக வேண்டும் என்பதே எனது விருப்பம் ஆகும்' என்று பதிவிட்டுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

elon musk tweet about america president election


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->