தைவானில் அடுத்தடுத்து மூன்று நிலநடுக்கம்.! - Seithipunal
Seithipunal


தென்மேற்கு தைவானில் அடுத்தடுத்து மூன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

தைய்வானின் பிங்டாங் கவுண்டியில் உள்ள கடல் பகுதியில் இரவு 9.45 மணியளவில் 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கம் 22.18 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 120.11 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையில் 20 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.

முன்னதாக காலையில் இரண்டு மணி நேர இடைவேளையில் தென்மேற்கு தைவானில் கடற்கரை பகுதியில் 5.0 மற்றும் 4.8 ரிக்டர் அளவிலான இரண்டு நில நடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் சேதங்கள் மற்றும் பொருள் சேதங்கள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Earthquake in Taiwan


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->