ஊரடங்கால் பெண்கள் பாதிக்கப்பட்ட விவகாரம்... ஐநா வரை சென்ற விவகாரம்.. கவலையில் ஐநா தெரிவித்த விஷயம்.!! - Seithipunal
Seithipunal


தற்போது கரோனா வைரஸின் தாக்கம் பெரும் பிரச்சனையாக இருந்து வரும் நிலையில், இந்த வைரஸின் தாக்கத்தால் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கரோனா உருவாகிய சீன நாட்டில் இருக்கும் முக்கிய நகரத்தில் மார்ச் மாத துவக்கத்தில் இருந்து விவாகரத்து தொடர்பான வழக்குகள் அதிகளவு வருவதாக தகவல்கள் ஏற்கனவே வெளியாகியிருந்தது.

சீனாவில் உள்ள ஹூபேய் மாகாணத்தில் கியஞ் சியாங் நகரில் பிப்ரவரி மாதத்தில் 82 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவாகியுள்ளது. மேலும், கடந்த வருடத்தில் மொத்தமாகவே ஒரு வருடத்திற்கு 47 வழக்குகள் பதிவாகி இருந்தது. கரோனா வைரஸின் தாக்கத்திற்கு பின்னர் இது அதிகளவு அதிகரித்தது.

இந்த விஷயம் பெரும் சோகத்தை அளிப்பதாக ஐநா சபையின் தலைவர் அண்டானியோ கூட்ரோஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, கரோனா வைரஸை தடுக்கும் ஊரடங்கில், தனிமைப்படுத்தல் என்பது அவசியம். இந்த நேரத்தில், வீட்டில் இருக்கும் பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகள் தொல்லைக்கு உள்ளாகின்றனர். 

கடந்த சில வரமாக பொருளாதார மற்றும் சமூக அழுத்தம் அதிகரித்த நிலையில், பயமும் அதிகரித்துள்ளது. குடும்ப வன்முறை அதிகரிப்பது வெளிப்படையாக தெரிகிறது. பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. கரோனாவை கட்டுக்குள் வைக்க ஊரடங்கு அமலாகியுள்ள நிலையில், பெண்களுக்கு பாதுகாப்பான அவர்களின் இல்லத்தில், குடும்ப ரீதியான வன்முறைகள் அதிகரித்துள்ளது. 

அனைவரின் இல்லத்திலும் அமைதியும், சமாதானமும் நிலவ வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். கரோனா தடுப்பு நடவடிக்கையின் போது, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வது முக்கியம். பெண்களின் பாதுகாப்பிற்கு முதல் இடத்தை கொடுக்க உலக நாடுகளை கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

due to corona curfew girl torture in home UNO sad about this statement


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->