வாழ்நாளில் ஒரு முறை கூட இதை பருகியது கிடையாது! இப்படியும் ஒரு மனுஷனா!! ட்ரம்ப் கடைப்பிடிக்கும் தனிப்பட்ட பழக்கங்கள்! - Seithipunal
Seithipunal


மெரிக்கா அதிபர் டிரம்ப், பொதுவாக காலையில் உணவு உண்ணுவது கிடையாது. மேலும், ட்ரம்ப், டீ, காஃபி மட்டுமின்றி மது அருந்தும் பழக்கமும் இல்லாதவர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அவரது வாழ்க்கையில் ஒரு முறை கூட மது அருந்தியது இல்லை எனக் கூறும் ட்ரம்ப், தனக்கு மது அருந்துபவர்களையும் பிடிக்காது என்று கூறுகிறாராம். ஒரு முறை அவரது சகோதரருக்கு குடியால் பிரச்னை ஏற்பட்ட போது, குடிப்பதை நிறுத்துமாறு அறிவுறுத்தியதாக தெரிகிறது. 

மேலும் சிகரெட் பிடிக்கும் பழக்கமோ, வேறு ஏந்த வகையிலான போதைப்பழக்கமோ ட்ரம்புக்கு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. 

மது அருந்தும் பழக்கமில்லாத ட்ரம்ப், டயட் கோக்கை விரும்பி அருந்துவார். ஒரு நாளில் ட்ரம்ப் 12 டயட் கோக் பாட்டில்களை கூட பருகுவார் என தகவல்கள் உண்டு.

வெண்பன்றி இறைச்சியை முட்டையுடன் கலந்து சாப்பிடும் பழக்கம் கொண்ட ட்ரம்ப் ஒரு பீட்சா ரசிகர், அதை அவர் விரும்பி சாப்பிடுவார் எனக் கூறப்படுகிறது. 

மேலும், சாக்லேட் மில்க் ஷேக், கடல் உணவுகள், உருளைக்கிழங்கு சிப்ஸ் ஆகியவையும் ட்ரம்பின் விருப்பப்பட்டியலில் உள்ள உணவுகளாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Donald trump never had alcohol


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->