தாம்பத்திய உறவால் பரவுகிறது டெங்கு காய்ச்சல்?.. ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவல்.! - Seithipunal
Seithipunal


பலருடன் கள்ளக்காதல் அல்லது முறையற்ற மற்றும் பாதுகாப்பற்ற உறவுகளால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் ஏற்படும் என்பது பலரும் அறிந்தது. இந்த நிலையில், ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் டெங்கு காய்ச்சலும் தாம்பத்தியம் என்ற கலவி உறவால் ஏற்படுகிறது என உறுதி செய்துள்ளனர். 

பொதுவாக டெங்கு காய்ச்சல் என்பது கொசுக்களின் வாயிலாக மனிதர்களுக்கு பரவுகிறது. கொசுக்களின் உள்ள ஏடிஸ் எஜிப்டி கொசுக்களின் மூலமாக டெங்கு நோய் மனிதர்களுக்கு பரவுகிறது. இந்த காய்ச்சல் உயிரிழப்பை ஏற்படுத்தும் என்பதால் பலரும் டெங்கு என்று கேட்டாலே பீதியாகத்தான் செய்கிறார்கள். 

இந்த நிலையில், டெங்கு காய்ச்சல் பாலியல் உறவாலும் பரவும் என உறுதி செய்யப்பட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டில் உள்ள மேட்ரிட் பகுதியை சார்ந்த 41 வயது பெண்மணி, கடந்த செப்டம்பர் மாதம் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதியாகியுள்ளார். 

அவரை மருத்துவர்கள் சோதனை செய்தபோது டெங்கு பரவியிருப்பது உறுதியான நிலையில், விசாரணையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்த ஆண் துணையுடன் பெண்மணி பாலியல் ரீதியான உறவு வைத்திருந்தது உறுதியானது. 

டெங்கு காய்ச்சல் எப்படி பாலியல் உறவில் பரவும் என நம்பிக்கை கொள்ளாத ஆய்வாளர்கள், பெண்ணின் ஆண் துணையை சோதிக்காயில், அவரது விந்தணுக்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில், அவருக்கு டெங்கு இருப்பது உறுதியான நிலையில், அவர் சென்று வந்த கியூபா மற்றும் டொமினிக் குடியரசு நாட்டில் உறுதி செய்யப்பட்ட டெங்கு வகை அவருக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்தனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dengue fever is spread by Couple Sexual Enjoy Analysts Says


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->