சீனாவில் உருவான சாபா புயல்.! குவாங்டாங் பகுதியில் வெள்ளப் பெருக்கு.! - Seithipunal
Seithipunal


சீனாவில் உருவான சாபா புயல் காரணமாக குவாங்டாங் பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தென்சீன கடல் பகுதியில் மிக கடுமையான சாபா புயல் உருவானதன் காரணமாக சீனாவின் கடலோர நகரங்களில் பலத்த மழை மற்றும் மணிக்கு 120 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசியது.

இந்நிலையில் சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் சாபா புயல் காரணமாக கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. நகரின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதோடு சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

தொடர் மின்தடை மற்றும் நிலச்சரிவு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதித்துள்ளது.

இதையடுத்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் பேரிடர் மீட்பு குழுவினர் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஆகஸ்ட் மாதம் வரை கனமழை மற்றும் வெள்ளத்திற்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cyclone chaba severely affects Guangdong


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->