ஜான்சன் & ஜான்சன் பவுடரால் உயிரிழந்த பெண் - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.! - Seithipunal
Seithipunal


குழந்தைகளுக்கு டயபர் போடுவதால் வரும் எரிச்சல், தழும்பு, ராஷஸ் முதலியவற்றைத் தடுக்க 1894 முதல் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் குழந்தைகளுக்கான டால்கம் பவுடர் விற்பனை செய்து வருகிறது. இந்தப் பவுடரை குழந்தைகள் மட்டுமின்றி தாய்மார்களும், பெண்களும் பயன்படுத்தினர். 

ஆனால் 1990 முதல், ஆஸ்பெஸ்டாஸ் கலப்படமான இந்த பவுடரைப் பயன்படுத்தியதால் குழந்தைகளுக்கும் தங்களுக்கும் கேன்சர் நோய் வந்துள்ளதாக பல்வேறு பெண்கள் வழக்கு தொடுத்தனர். அதிலும் குறிப்பாக, அமெரிக்காவில் மட்டும் 22 வழக்குகள் தொடரப்பட்டது. அதில், ஒரு வழக்காக புற்றுநோயில் இறந்த பெண்ணின் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

அதன் முடிவில், டால்கம் அடிப்படையிலான பவுடரில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய ரசாயனப் பொருட்கள் கலந்திருப்பதை அறிந்து விற்றதால், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு 45 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில், ரூ.375 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

court order to johnsons company compensation provide to died woman family


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->