இனி மின்னல் வேகத்தில் கொரோனா பரவும்.! பீதியை கிளப்பிவிடும் வல்லுநர்கள்.! - Seithipunal
Seithipunal


குளிர் காலம் நெருங்கி வரும் நிலையில், வெப்பநிலை குறைந்து வருவதால் கொரோனா நோய் தொற்று முன்பை விட அதிக வேகத்தில் பரவும் அபாயம் உள்ளதாக உலக சுகாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இது முதல்முறை பரவியதை விடவும் மோசமாக இருக்கும் என்றும் கூறி வருகின்றனர்.

இந்த வைரஸ் உலகம் முழுவதும் சுமார் 30 கோடி மக்களையும் பாதித்துள்ளது. அதோடு 9 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கொரோனா வைரஸ் இருக்கு தடுப்பு மருந்து ஒன்றைக் கண்டுபிடிக்க அரும்பாடுபட்டு வருகின்றன.

கொரனோ தொற்றுக்கு இரண்டு தடுப்பு மருந்து ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்கள் தடுப்பு மருந்து பரிசோதனையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாக கூறி வரும் நிலையில், அடுத்த ஆண்டு முற்பகுதி வரை அந்த மருந்து பயன்பாட்டிற்கு வருவதற்கு சாத்தியம் இல்லை என்று உலக சுகாதார மையத்தின் அவசரகால தலைவர் ஜூலை மாதத்தில் தெரிவித்திருந்தார்.

சமீபத்தில் அமெரிக்காவை சேர்ந்த சுகாதார மற்றும் நோய் தடுப்பு மையங்கள் இயக்குனரான ராபர்ட் 2021 ஆம் ஆண்டு கோடை வரை தடுப்பூசி தயாராகும் நிலையில் இல்லை என்று கூறினார்.இந்த நிலையில் சில விநாடிகள் குளிர்காலத்தில் நோய் தொடரின் இரண்டாவது அலை ஏற்பட வாய்ப்பு இருப்பது குறித்து கவலை எழுப்பியுள்ளனர். இது முதல் பகுதியை விட மிக மோசமானது என்று பீதியைக் கிளப்பி உள்ளனர்.

நோய்தொற்று பரவலும் குளிர்காலமும் ஒன்றிணையும் போது நோய் பரவலின் வேகம் மிக அதிகமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர் தொடங்கி டிசம்பர் மற்றும் பிப்ரவரி மாத ங்களுக்கு இடையே நோய் பரவல் மிக அதிகமாக இருக்கும் என்று மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா தொற்று பரவலின் முதல் பாதியை இன்னும் முடியாத நிலையில் மருத்துவர்களின் இந்த எச்சரிக்கை மக்களிடையே பீதியை கிளப்பி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

corona may spread very fast on winter


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->