விடுமுறை கொடுக்காததால் சாப்பாட்டில் கரப்பான் பூச்சியை போட்ட சமையல்காரர்.! - Seithipunal
Seithipunal


விடுமுறை கொடுக்காததால் ஹோட்டல் கிச்சனுக்குள் கரப்பான் பூச்சியை விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இங்கிலாந்தில் உள்ள லிங்கம் நகரத்தில் உள்ள ராயல் வில்லியம் என்ற உணவு விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு சமையல் ஊழியராக டோனி வில்லியம்ஸ் வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் அந்த உணவு விடுதியில் உரிமையாளருக்கும் சமையல்காரரான வில்லியம்சுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

அதாவது சரியாக விடுமுறை அளிக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் விடுமுறைக்குரிய சம்பளத்தையும் வழங்கவில்லை. இதனால் வில்லியம்ஸ் தனது வேலையை ராஜினாமா செய்துள்ளார்.

இதனையடுத்து ஹோட்டல் உரிமையாளரை பழிவாங்கும் எண்ணத்தில் ஹோட்டலின் கிச்சனுக்குள் 20 கரப்பான் பூச்சிகளை வில்லியம்ஸ் விட்டுள்ளார். கரப்பான் பூச்சி ஹோட்டலில் இருந்துதான் காரணமாக தற்போது அந்த ஹோட்டல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cook put a cockroach in the food because he was not given a holiday


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->