அதிகரிக்கும் போர்பதற்றம்: தைவான் எல்லைக்குள் நுழைந்த 31 சீன போர் விமானங்கள்.! - Seithipunal
Seithipunal


சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபைத் தலைவா் நான்சி பெலோசி, அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமெரிக்காவின் இண்டியானா மாகாண கவர்னரின் தைவான் பயணம் சீனாவை கடும் கோபத்துக்குள்ளாக்கியது.

மேலும் தைவான், அமெரிக்காவுடன் கூட்டுப் போர் பயிற்சியில் ஈடுபட்டதால் தைவான் எல்லையில் சீனா தீவிர போர் பயிற்சி மேற்கொண்டது. இதை பொருட்படுத்தாமல் அமெரிக்காவை தொடர்ந்து, ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகள் தைய்வானுக்கு பயணம் செய்து வருகின்றனர். இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர்பதற்றம் நிலவி வருகிறது.

இந்நிலையில் தைவானை மிரட்டும் விதமாக சீனா 4 போர்க்கப்பல்களையும், 31 போர் விமானங்களையும் தைவான் எல்லைக்குள் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக தைவான் ராணுவ அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், காலை 6 மணியாளவில் 31 விமானங்களையும், 4 போர்க்கப்பல்களையும் சீனா அனுப்பியுள்ளது.

இதைத்தொடர்ந்து தைவானில் நிலம், வான் மற்றும் நீர் பகுதிகளில் கண்காணிப்பை பலப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கண்காணிப்பு பணியில் தைவான் விமானங்கள் செயல்பட்டு வருகிறது என்றும், பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளை தயார் நிலையில் வைத்திருப்பதாகவும் தைவான் தெரிவித்துள்ளது. சீனாவின் இந்த திடீர் நடவடிக்கையால் தைவான் எல்லையில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chinese 31 warplanes enters Taiwan as war tension increases


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->