அமெரிக்க போர்க்கப்பலின் நடவடிக்கையால்... பின்விளைவுகள் ஏற்படும் - சீனா மிரட்டல் - Seithipunal
Seithipunal


ஒவ்வொரு ஆண்டிற்கும் ட்ரில்லியன் டாலர்கள் வர்த்தகம் செய்யும் வழித்தடமான தென் சீன கடலில்,  பாராசெல் தீவுகளைச் சுற்றி கடந்த இரண்டு நாட்களாக அமெரிக்க கடற்படையின் யூ.எஸ்.எஸ் மிலியஸ் அழிப்பு வகை கப்பல் கண்காணித்து வருவதாக சீனா குற்றம் சாட்டி வருகிறது.

இதைத்தொடர்ந்து அமெரிக்க கப்பல் சீனாவின் கடல் எல்லைக்குள் நுழைந்ததால், சீனா தனது கடற்படை மற்றும் விமானப்படையின் மூலம் அமெரிக்க கப்பலை விரட்டி அடித்ததாக சீன அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க ராணுவம் வெளியிட்ட தகவலில், அமெரிக்க போர் கப்பல் சர்வதேச கடல் வழித்தடத்தை மட்டுமே பயன்படுத்தியதாகவும், சீனா எல்லைக்குள் நுழையவில்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்கப் போர்க்கப்பல் தொடர்ந்து சீன எல்லைக்குள் நுழைய முற்பட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என சீனா மிரட்டல் விடுத்துள்ளது. மேலும் அமெரிக்கா தனது நடவடிக்கைகளால் தென் சீனக் கடலின் அமைதி மற்றும் நிலைத்தன்மை பாதிக்கப்படும் என சீனாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

China threatens consequences over America warship actions


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->