#Breaking: வேதியியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


ஒவ்வொரு வருடத்திலும் இயற்பியல், மருத்துவம், வேதியியல் மற்றும் பொருளாதாரம், அமைதி, இலக்கியம் போன்ற 6 துறைகளில் சிறந்து விளங்கி சாதனை படைக்கும் நபர்களுக்கு நோபல் பரிசு வழங்கும் நிகழ்வு நடைபெற்று வருகிறது.

இதன்படி, இயற்பியல் துறையில் சிறந்து விளங்கியதாக 3 பேருக்கு நோபல் அறிவிக்கப்பட்டுள்ளது. ரோஜர் பேனரோஸ், ரெயின்ஹார்டு கேன்சல், அண்ட்ரெஸ் கேஸ் ஆகிய 3 பேருக்கு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. 

கருந்துளை எப்படி உருவானது என்பது தொடர்பாக ஆராய்ச்சி மேற்கொண்டு வந்த அறிவியலாளர் ரோஜருக்கு இயற்பியல் நோபல் பரிசும், விண்மீன் திரளின் மையப்பகுதி தொடர்பான கண்டுபிடிப்பிற்காக ரெயின்ஹார்டு கேன்சல், அண்ட்ரெஸ் கேஸ் ஆகியோருக்கு இயற்பியல் நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது வேதியியல் பிரிவிற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இம்மானுவேல் சார்ப்பெண்டிர் மற்றும் ஜெனிபர் டவடனா ஆகியோருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பட்டுள்ளது. செல்களின் டி.என்.ஏக்களில் ஏற்படும் மாற்றம் மற்றும் மரபணு தொடர்பான ஆய்வுகள் மேற்கொண்டதற்காக நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chemistry Nobel Price announced 7 October 2020


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->