கடற்கொள்ளையர்களால் சிறைபிடிக்கப்பட்ட எண்ணெய் கப்பல்.. 18 இந்தியர்களின் கதி?..!!  - Seithipunal
Seithipunal


நைஜீரிய நாட்டு பகுதியில் கடற்கொள்ளையர்கள் ஆதிக்கமானது பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது. இக்கடல் பகுதி வழியாக பிற நாடுகளுக்கு செல்லும் பிரதான கப்பல்களை கைப்பற்றி., ஊழியர்களை சிறைபிடித்து தங்களின் கோரிக்கையை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில்., இது போன்ற துயரம் மீண்டும் அரங்கேறியுள்ளது.

ஹாங்காங் நாட்டிற்கு சொந்தமான எண்ணெய் கப்பல் ஒன்று ஆப்பிரிக்க நாட்டில் உள்ள நைஜீரிய நாட்டு கடல் பகுதியில் சென்று கொண்டு இருந்துள்ளது. இந்த கப்பலில் கச்சா எண்ணெய் இருந்த நிலையில்., இக்கப்பல் அட்லாண்டிக் கடல் நோக்கி சென்று கொண்டு இருந்தது. 

இந்த நேரத்தில் கப்பலை திடீரென கொள்ளையர்கள் இடைமறித்து நிறுத்தினர். இதனால் பதறிப்போன கப்பல் நிர்வாகிகள் செய்வதறியாது திகைக்கவே., கப்பலை தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கடற்கொள்ளையர்கள் கொண்டுவந்துள்ளனர். 

Caribbean pirates sea, Nigerian ship hijacked with 18 Indians,

இந்த கடத்தல் சம்பவம் குறித்த தகவலை சர்வதேச பாதுகாப்பு நிறுவனமான ஏ.ஆர்.எக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள நிலையில்., இந்த கப்பலில் 18 இந்தியர்கள் உட்பட 19 பேர் இருந்துள்ளனர் என்றும்., அவர்களின் கதி என்ன என்பது தெரியாது என்பதும் தெரிவித்துள்ளனர். 

இந்த தகவலை அறிந்த நைஜீரிய - இந்திய தூதரக அதிகாரிகள்., கப்பலில் பயணம் செய்த விவரங்களை அறிந்து வருகின்றனர். மேலும்., இவர்களை மீட்கவும் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசும் தேவையான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Caribbean pirates sea Nigerian ship kidnapped with 18 Indians


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->