லண்டன் பல்கலைக்கழகத்தில் இந்தியாவிற்கு எதிராக அவதூறு பிரச்சாரம் - இந்திய மாணவர் பரபரப்பு குற்றச்சாட்டு.!! - Seithipunal
Seithipunal


லண்டன் பல்கலைக்கழகத்தில் இந்தியாவிற்கு எதிராக அவதூறு பிரச்சாரம் - இந்தியா மாணவர் பரபரப்பு குற்றச்சாட்டு.!!

இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டனில் 'லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ்' என்ற பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் இந்தியாவில் உள்ள அரியானா மாநிலத்தை சேர்ந்த கரண் கட்டாரியா என்ற மாணவர் முதுகலை சட்டப் பட்டப்படிப்பு படித்து வருகிறார். 

இந்த நிலையில் பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. அதில் கரண் கட்டாரியாவும் போட்டியிட்டுள்ளார்.

ஆனால் தான் ஒரு இந்தியர் மற்றும் இந்து மதத்தை சேர்ந்தவர் என்பதால் தேர்தலில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதாகவும், பல்கலைக்கழகத்தில் இந்தியாவுக்கு எதிராக அவதூறு பிரசாரம் மேற்கொள்ளப்படுவதாகவும் கரண் கட்டாரியா குற்றம் சாட்டியுள்ளார். 

இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது:- "நான் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் படிப்பைத் தொடங்கியபோது, மாணவர் நலனுக்கான எனது ஆர்வத்தை நிறைவேற்ற பாடுபடுவேன் என்று நான் உண்மையிலேயே நம்பினேன். 

ஆனால், பல்கலைக்கழகத்தில் எனது இந்திய மற்றும் இந்து அடையாளத்தின் காரணமாக எனக்கு எதிராக வேண்டுமென்றே திட்டமிட்ட அவதூறு பிரச்சாரம் தொடங்கப்பட்டது. அப்போது எனது கனவுகள் அனைத்தும் சிதைந்தன. 

பல்கலைக்கழகத்தில் இந்தியாவுக்கு எதிராக பிரசாரத்தை தொடங்கியவர்களை கண்டறிந்து தண்டிப்பதற்குப் பதிலாக பல்கலைக்கழக நிர்வாகம் இந்த விவகாரத்தில் இருந்து ஒதுங்கியுள்ளது" என்றுத் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

campaign against india in london university


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->