கொரோனா : பிரேசில் அதிபர் ஏற்படுத்தி கொண்ட களங்கம்! - Seithipunal
Seithipunal


கொரோனா வைரஸ் குறித்த பொய்யான கட்டுக்கதைகளை பரப்புவதாகக் கூறி, பிரேசில் அதிபர் ஜாயிர் போல்சனாரோவின் காணொலியை டிவிட்டரும் முகநூலும் நீக்கியுள்ளன.

கொரோனா வைரஸ் தொற்று சாதாரண காய்ச்சல் தான். இதற்காக சமூக இடைவெளி தேவையில்லை. மக்கள் தனித்திருப்பதை கைவிட வேண்டும் என்று பிரேசில் அதிபர் கூறிய காணொலியை டிவிட்டர் நீக்கியுள்ளது.

அதே போன்று, கொரினாவை கண்டு அஞ்ச வேண்டாம். Hydroxychloroquine எனும் மருந்தை பயன்படுத்தினால் போதும் என்று அவர் பேசிய வீடியோவை டிவிட்டர், முகநூல், இன்ஸ்ட்டாகிராம் ஆகியவை நீக்கியுள்ளன.

(இந்த மருந்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் பரிந்துரைத்தார். ஆனால், அமெரிக்காவின் மருத்துவ முகமை CDC இதற்கு ஆதாரமில்லை என நிராகரித்து விட்டது)

கொரோனா வைரஸ் குறித்து பொய்யான வதந்திகளை பிரபலங்களே பரப்பினால், அதனால் மிகப்பெரிய ஆபத்துகள் நேரும் என்பதால், பிரபலங்களின் கொரோனா fake news பதிவுகள் நீக்கப்படும் என்று டிவிட்டரும் முகநூலும் அறிவித்துள்ளன.

தமிழ்நாட்டில் நடிகர் ரஜினிகாந்த் டிவிட்டர் பதிவும் அவ்வாறு நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Brazil president posted fake information in social media about Corona


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->