ரிஷி சுனக் தலைமையில் இந்தியா-பிரிட்டன் நல்லுறவு வளர்ச்சி அடையும்.! போரிஸ் ஜான்சன் - Seithipunal
Seithipunal


ரிஷி சுனக் தலைமையில் இந்தியா பிரிட்டன் இடையேயான நல்லுறவு வளர்ச்சி அடையும் என்று பிரிட்டன் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் டெல்லியில் நடைபெற்ற தலைமைத்துவ உச்சி மாநாட்டில் பங்கேற்ற பின்பு, ஆங்கில நாளிதழ் ஹிந்துஸ்தான் டைம்ஸ் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கிட்டு பேசினார்.

அதில் தற்போது நிலவும் சர்வதேச சூழல்கள் மிகவும் சவால் நிறைந்தவை. இந்நிலையில் இந்தியாவும், பிரிட்டனும் தங்களுக்குள் நல்லுறவை மேம்படுத்துவது அவசியமானது என்று தெரிவித்துள்ளார். இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தலைமையில் இந்தியா மற்றும் பிரிட்டன் இடையே உறவுகள் வலுவாக வளர்ச்சி அடையும் என்று உறுதியாக தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா மற்றும் பிரிட்டன் இடையேயான தடையற்ற வர்த்தகம் தொடர்பான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என்றும், அந்த ஒப்பந்தம் அமலில் இல்லாத பொழுதே இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் 28% அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Boris Johnson says under rishi sunak leadership India and Britain relations improve


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->