'பாலியல் உறவு' கடவுள் கொடுத்த பரிசு - போப் பிரான்சிஸ் சர்ச்சை பேச்சு.! - Seithipunal
Seithipunal


உடலுறவு என்பது கடவுள் நமக்கு கொடுத்திருக்கும் அழகான விஷயம் என போப் பிரான்சிஸ் தெரிவித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

வாடிகன் நகரில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஒரு ஆவண படத்திற்கான கூட்டத்தில் உலகெங்கிலும் உள்ள சிறந்த 10 இளம் பேச்சாளர்களுடன் பல்வேறு விஷயங்களை கலந்துரையாடினார். தற்போது அந்த காணொளி ஆவணப்படமாக வெளியிடப்பட்டுள்ளது. 

இந்த ஆவணப்படம் கடந்த புதன்கிழமை வெளியாகியது. இந்த கலந்துரையாடலில் பேசிய போப் பிரான்சிஸ் பாலின பாகுபாடு, குழந்தைகளை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கும் நபர்கள், தன் பாலின ஈர்ப்பாளர்கள் என பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தனர்.

சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இந்த விவாதத்தில் பாலினம் தொடங்கி அகதிகள் பிரச்சனை, நிறைவேறி மற்றும் இனவெறி மனம் சார்ந்த பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளின் கீழ் விவாதம் செய்தனர்.

மேலும், பாலியல் உறவு குறித்து பேசிய அவர் கடவுள் கொடுத்த அழகான விஷயங்களில் ஒன்று பாலியல் உறவு என அவர் தெரிவித்துள்ளார். மேலும், தொடர்ந்து பேசிய அவர் தன் பாலின ஈர்ப்பாளர்கள் கத்தோலிக்க தேவாலயங்களுக்கு வருவதை ஊக்குவிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் அவர்களை சமூகத்தின் அங்கமாக முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bop Francis speech about sex


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->