மும்பை உயர்நீதிமன்ற அவுரங்காபாத் கிளைக்கு வெடிகுண்டு மிரட்டல்.! - Seithipunal
Seithipunal


நேற்று முன்தினம் மகாராஷ்டிரா மாநிலத்தின் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு செல்போன் அழைப்பு ஒன்று வந்தது. அதில் ஏத்திமுனையில் பேசிய நபர் "நான் பணம் செலுத்தி விட்டேன். 

ஆனால் எனது வேலை நடக்கவில்லை. இதனால் மும்பை உயர்நீதிமன்றத்தின் அவுரங்காபாத் கிளை கட்டிடத்தில் வெடிகுண்டு வைத்துள்ளேன்" என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்து விட்டார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் சம்பவம் தொடர்பாக அவுரங்காபாத் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி, போலீசார் வெடிகுண்டு படை பிரிவுடன் உயர்நீதிமன்றத்திற்கு சென்றனர்.

அங்கு உயர்நீதிமன்ற வளாகம், வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர். ஆனால், அங்கு வெடிகுண்டு எதுவும் கிடைக்க வில்லை. 

இதையடுத்து போலீசார் சம்பவம் தொடர்பாக விசாரணை செய்ததில் வெடிகுண்டு தகவல் வெறும் புரளி என்பது தெரியவந்தது. இந்த நிலையில், போலீசார் மிரட்டல் குறித்து வழக்கு பதிவு செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bomb threat to aurangabad high court


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->