"இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு இல்லை"..!! இந்தியாவுக்கு பஹ்ரைன் கண்டனம்..!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் இருக்கும் இஸ்லாமியர்கள் பாதுகாப்பில்லாத நிலையில் இருப்பதால் வளைகுடா நாடுகள் இந்திய அரசைக் கண்டிக்க வேண்டும் என பஹ்ரைன் நாட்டு நாடாளுமன்றத்தில் வலியுறுத்தல்.!

உத்தரப்பிரதேசத்தில் ரவுடியாக இருந்து அரசியல் களத்தில் இறங்கிய முன்னாள் எம்.பி அத்திக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரஃப் அகமது ஆகியோர் கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி காவல்துறையினர் முன்னிலையில் சுட்டுக்கொல்லப்பட்டனர். பத்திரிகையாளர்கள் போர்வையில் வந்து மூன்று பேர் கொண்ட கும்பல் அவர்களை சுட்டுக் கொலை செய்தனர்.

உத்தரபிரதேசம் மாநிலம் பிரக்யராஜ் நகரில் மருத்துவப் பரிசோதனைக்காக அவர்களை காவல்துறையினர் அழைத்துச் சென்றபோது அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றது. இந்நிலையில் இந்தக் கொலை சம்பவம் குறித்து பஹ்ரைன் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட்டுள்ளது.

அதிக் அகமது மற்றும் அவரின் சகோதரர் காவல்துறை முன்னிலையில் கொலை செய்யப்பட்டதற்கு பஹ்ரைன் பாராளுமன்றத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து பஹ்ரைன் நாடாளுமன்றத்தில் "இந்தியர்கள் பஹ்ரைனில் வாழ்ந்து வருகிறார்கள். இந்தியர்கள் பஹ்ரைனில் சுயமரியாதையோடு வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களை யாரும் தொந்தரவு செய்யவில்லை. இன்னும் சொல்ல போனால் அவர்களைப் பாதுகாத்து வருகிறோம்.

இந்தியர்கள் அனைவரும் தங்கள் மதங்களை பின்பற்றுகிறார்கள். நிம்மதியாக வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் இந்தியாவில் இஸ்லாமியர்களின் நிலை கவலை அளிக்கிறது. இந்தியாவில் இஸ்லாமியர்களின் நிலை ஏற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு உள்ளது. வளைகுடா நாடுகள் இந்திய அரசை கண்டிக்க வேண்டும்" என விவாதிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bahrain condemns no security for Muslims in India


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->