அம்மாவின் பனிக்குடத்தில் இருந்தவாறே வெளியே வந்த குழந்தை.! வெளியான வீடியோ காட்சிகள்.!! - Seithipunal
Seithipunal


இந்த உலகத்தில் எத்தனையோ விசித்திரங்கள் மற்றும் உருவாக்கங்கள் இன்றளவும் எல்லைகள் இல்லாத ஆராய்ச்சியாக தொடர்ந்து கண்டறியப்பட்டு வருகிறது. நமது மனித உடலின் செயல்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து மேற்கொள்ளப்பட்டு வரும் ஆராய்ச்சியானது., இணைய வாழ்க்கையின் இன்றளவிலும் தொடர்ந்தே வருகிறது. 

நாம் பிறக்க காரணமாக இருந்த அம்மாவின் வயிற்றில் இருக்கும் கருவறைக்குள் நாம் மாதக்கணக்கில் அமைதியாக இருந்து., நாம் கருவாக இருந்து., உருமாறி வெளியே வந்து தாயை காண்கிறோம். தாயின் கருவறைக்குள் நாம் இருந்த நேரத்தில்., செய்த சேட்டைகளின் வலியை விட., தாயை விட்டு பிரிந்து வரும் நேரத்தில்., தாய்க்கு நாம் கொடுக்கும் வலிக்கு பதிலே கூற இயலாது. 

baby, baby in mother stomach,

தாயின் வயிற்றுக்குள் இருக்கும் கருவறையில் நாம் உருவாக துவங்கிய சமயத்தில் இருந்தே., நம்மை பாதுகாக்க பனிக்குடமும் தயாராக இருக்கும். தாயின் வயிற்றில் இருக்கும் கருவறைக்குள் பத்திரமாகவும்., பனிக்குடத்தின் உதவியோடு பாதுகாப்பாகவும்., தொப்புள்கொடியின் உதவியோடு சுவாசித்து கொண்டும்., சாப்பிட்டுக்கொண்டும் இருப்போம். 

இதற்கு பின்னர் நாம் முழுமையாக வளர்ச்சியடைந்த பின்னர்., தாயாரை விட்டு வெளியேற தயாராகி., இயற்கையான பிரசவத்தின் மூலமாகவோ அல்லது அறுவை சிகிச்சை முறையிலேயோ தாயை காணாத்தவித்து காண்போம். இன்றுள்ள காலகட்ட நிலையில் பெண்கள் மற்றும் அவரின் வீட்டார் வசதிக்கேற்பவும்., பெண்ணின் உடல் சூழ்நிலைக்கேற்பவும் குழந்தையை அறுவை சிகிச்சை செய்தோ அல்லது சுக பிரசவத்தின் மூலமாகவோ பெற்றெடுத்து கொள்கின்றனர். 

இந்த தருணத்தில்., தாய்க்கு ஏற்படும் வலிகளை அவளை தவிர பிற யாராலும் உணர இயலாது. தாயின் பனிக்குடத்தில் இருந்தவாறே குழந்தையொன்று அறுவை சிகிச்சை மூலமாக வெளியே எடுக்கப்படும் காட்சிகளானது தற்போது இணையத்தில் தொடர்ந்து வைரலாகி வருகிறது. இது குறித்த பிற விபரங்கள் தெரியாத நிலையில்., அறுவை சிகிச்சை மூலமாக குழந்தையை பெற்றெடுக்க விரும்பியுள்ள பெண்ணிற்கு மருத்துவமனையில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். 

பின்னர் இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து., உடனடியாக அறுவை சிகிச்சைக்கு தயார் செய்து குழந்தையை வெளியெடுத்துள்ளனர். இக்குழந்தை வெளியே வரும் போது பனிக்குடத்துடன் வெளியே வந்து., பின்னர் பனிக்குடத்தில் உள்ள நீரினை வெளியேற்றுகிறது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

baby coming mother water pot by surgery


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->